மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.