ஆதிவாசி கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம்
ஆதிவாசி கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம்
மஞ்சூர்
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மஞ்சூர் அருகே ஜெ.ஜெ. நகர், தணியகண்டி, காமராஜ் நகர், ஆனைகட்டி, குஞ்சப்பனை, எல்லமலை நாயக்கன்பாடி, கோழிமூலா, விளாங்கூர் ஆகிய ஆதிவாசி கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இதில் அனைத்து துறையை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டு ஆதிவாசி மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். ேமலும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாம்களில் மொத்தம் 405 ஆதிவாசி மக்கள் கலந்துகொண்டு 124 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.