குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகள் குறித்து குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாம் குடிமைப்பொருள் தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு- மாற்றம், அங்கீகாரச்சான்று, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் மற்றும் இதர குறைகள் தொடர்பான மனுக்களை அளிக்கலாம். மேற்கண்ட தகவல்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.