போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் நிலையங்களில் காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு காணாமலும், மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் குறை தீர்வு மகாம் நடைபெற்றது. 3 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார். புதிதாக 20 புகார் மனுக்களை பொதுமக்களிடம் நேரடியாக பெற்றுக்கொண்டார். இதில் இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.