போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2023-07-19 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அதே போல நேற்றும் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

இதில் நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை மற்றும் குளச்சல் போலீஸ் துணை சரகங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் முடிக்கப்படாமல் உள்ள புகார் மனுக்களை விரைந்து முடிக்க மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை வரவழைத்து 100 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. இதன் காரணமாக சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ஒவ்வொரு துணை சரகம் வாரியாக வந்த புகார் மனுக்களை அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் முகாமை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தும் நேரில் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்