ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாமில் 79 மனுக்களுக்கு தீர்வு

மாவட்டம் முழுவதும் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாமில் 79 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-01-21 18:45 GMT

நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் மூலம் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு ஆகியவற்றை நிறைவேற்றவும், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ளவும், பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று 8 இடங்களில் நடைபெற்றது.

நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் தலைமையில் முகாம் நடந்தது. இதேபோல் ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாம்களில் மொத்தமாக 81 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 79 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 2 மனுக்கள் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்