வணிகநல வாரிய உறுப்பினர் அமைச்சரிடம் வாழ்த்து
தூத்துக்குடியில் வணிகநல வாரிய உறுப்பினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றார்.
ஆறுமுகநேரி:
தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஆணைப்படி வணிக நல வாரிய உறுப்பினராக காயல்பட்டினம் ஓடக்கரையை சேர்ந்த எஸ். பி. ஆர். ரங்கநாதன் என்ற சுகு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காயல்பட்டினம் நகரசபை உறுப்பினராகவும், மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தூத்துக்குடியில் தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.