விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து...!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை,
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி தினத்தன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவார்கள்.
அதே போன்று நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள், விநாயகர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடக்கும். ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதி மக்கள் சார்பில் பெரிய அளவிலான சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்படும்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
'விநாயகப் பெருமான் நமக்கு ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கட்டும்' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.