சென்னையில் உள்ள 21 ரெயில் நிலையங்களை பசுமையாக்கும் பணி - தெற்கு ரெயில்வே அழைப்பு

சென்னையில் உள்ள 21 ரெயில் நிலையங்களை பசுமையாக்கும் பணிகளை மேற்கொள்ள பல்வேறு அமைப்புகளுக்கு தெற்கு ரெயில்வே அழைப்பு விடுத்துள்ளது.

Update: 2022-07-07 14:26 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் உள்ள 21 ரெயில் நிலையங்களை பசுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரெயில் நிலையங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் இணைப்புச் சாலைகளில் செடிகள், நறுமணச் செடிகள், மூலிகைகள் மற்றும் மருந்து செடிகள், அலங்கார செடிகள், பூச்செடிகள் நட்டு பராமரிக்க வேண்டும்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், பெரு நிறுவனங்கள், அரசு அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் சுயஉதவிகள் இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம்.

இந்த திட்டம் முதல் கட்டமாக தாம்பரம், செங்கல்பட்டு, நுங்கம்பாக்கம், கிண்டி, சென்னை எழும்பூர், சேத்துபட்டு, ஜோலார்பேட்டை, வாலாஜா சாலை, காட்பாடி, திருத்தணி, அரக்கோணம், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் சூலூர்பேட்டை ஆகிய 21 ரெயில் நிலையங்களில் அமல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்