பச்சை தேயிலை கிலோ ரூ.16.30 விலை நிர்ணயம்

பச்சை தேயிலை கிலோ ரூ.16.30 விலை நிர்ணயம்

Update: 2023-06-01 19:15 GMT

குன்னூர்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை வாரியம் மூலம் மாதந்தோறும் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி மே மாத குறைந்தபட்ச விலையாக பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு 16 ரூபாய் 30 காசுகள் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குனர் எம்.முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2021-ம் ஆண்டின் தேயிலை(சந்தைப்படுத்துதல்) கட்டுபாட்டு ஆணையின்படி பச்சை தேயிலையின் மாவட்ட குறைந்தபட்ச விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மே மாத மாவட்ட குறைந்தபட்ச விலையாக பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு 16 ரூபாய் 30 காசுகள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மே மாதத்தில் நடைபெற்ற தேயிலை ஏலத்தில் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்த சி.டி.சி. தேயிலைத்தூளின் விற்பனை விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது ஆகும். இந்த விலையை மாவட்டத்திலுள்ள அனைத்து தேயிலை தொழிற்சாலைகளும் பச்சை தேயிலை சிறு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதை தேயிலை வாரிய கள அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை வளர்ச்சி உதவி இயக்குனர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்