"மேன்மக்கள் என்றும் மேன்மக்களே" - அமைச்சர் செந்தில் பாலாஜி டுவீட்
மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்று அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கடலூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களென பெருமைப்படுத்தினார், நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் தளபதி அவர்கள்...
பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார்...
மேன்மக்கள் என்றும் மேன்மக்களே." என்று பதிவிட்டுள்ளார்.