பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பெரியப்பா

செய்யாறு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பெரியப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-04 16:38 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி தனது தாயருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாணவியின் தாயார் வீரம்பாக்கம் சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இதுபற்றி மாணவியிடம் விசாரித்ததில், தனது பெரியப்பா அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறினார். இதுகுறித்து மாணவியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோனியா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள மாணவியின் பெரியப்பாவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்