கிரேட் பாம்பே சர்க்கஸ் தொடங்கியது

தூத்துக்குடியில் கிரேட் பாம்பே சர்க்கஸ் தொடங்கியது.

Update: 2023-05-14 19:00 GMT

கடந்த 104 ஆண்டுகளாக பல்வேறு நகரங்களில் சர்க்கஸ் நடத்தி வரும் கிரேட் பாம்பே சர்க்கஸ் தூத்துக்குடியில் நடக்கிறது. இதன் தொடக்க விழா தூத்துக்குடி எட்டயாபுரம் ரோடு பகுதியில் உள்ள திடலில் நடந்தது. கே.எஸ்.பி.எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சர்க்கஸ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆண்கள், பெண்களின் பார் விளையாட்டு, பெண்களின் ரிங்டான்ஸ், 150 அடி உயரத்தி நடந்து செல்லுதல், மரண கிணறு, சைக்கிள் விளையாட்டு போன்ற சாகச விளையாட்டுகள் நடந்தது. மேலும் ரஷியாவில் நடந்த உலக சர்க்கஸ் போட்டியில் தங்கபத்தகம் வாங்கிய ஆப்பிரிக்க நாட்டைச் சார்ந்த 4 இளைஞர்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிரேட் பாம்பே சர்க்கஸ் மேலாளர் பிரகாஷ் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்