கிராவல் மண் கடத்தல் டிரைவர் கைது
நடுவீரப்பட்டு அருகே கிராவல் மண் கடத்தல் டிரைவர் கைது
நடுவீரப்பட்டு
நடுவீரப்பட்டு அருகே உள்ள சி.என்.பாளையம் பகுதியில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டின் சிறப்பு படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது செம்மண் கிராவல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டர் டிரைவர் சி.என்.பாளையத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரை கைது செய்த போலீசாா் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.