50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள்

50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள்

Update: 2023-06-13 18:45 GMT


நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் தமிழக அரசு, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடைகளுக்கான தீவன விரயத்தை குறைப்பதற்கும், ஜீரண சக்தியை அதிகப்படுத்தவும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள், தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.32 ஆயிரம் மதிப்பிலான மின்சார புல் நறுக்கும் கருவிக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனை பெற குறைந்தபட்சம் 2 கால்நடைகள் (2 மாடுகள்) வைத்திருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற அரசு மானிய திட்டங்களில் பயன் பெற்றவராக இருத்தல் கூடாது. சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யும் பயனாளி 50 சதவீதம் பங்குத்தொகை செலுத்த வேண்டும். இதுபோன்ற விதிமுறைகளுடன் தகுதி உள்ளவர்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கம் பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்