கலவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.6.5 லட்சம் நலத்திட்ட உதவிகள்
கலவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.6.5 லட்சம் நலத்திட்ட உதவிகள்
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலவை பாரத ஸ்டேட் வங்கி சார்பாக இணைவோம் வளர்வோம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மண்டல மேலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தரணிபாய் முன்னிலை வகித்தார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பரஞ்சோதி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பள்ளியில் 25 மரக்கன்றுகளை ஆற்காடு எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன் நட்டார். பின்னர் பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
சென்னை பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர் சபல்திரிபாதி மாற்றுத்திறனாளிகள் 10 நபருக்கு மூன்று சக்கர வண்டி, பள்ளிக்கு தேவையான ஸ்மார்ட் கணினியும் எலக்ட்ரிக் பொருட்கள் உள்ளிட்ட ரூ. 6.5லட்சத்தில் நல திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.