வேலூர் கோட்டையில் ரூ.12 லட்சம் மதிப்பில் கிரானைட் இருக்கைகள்
வேலூர் கோட்டையில் ரூ.12 லட்சம் மதிப்பில் கிரானைட் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டை வளாகத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் ஏராளமானவர்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர். மேலும் கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், அருங்காட்சியகம் உள்ளிட்டவைகளை சுற்றிப் பார்க்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் நடைபயிற்சி செய்பவர்கள் ஓய்வு எடுப்பதற்காக இருக்கைகள் அமைக்க வேண்டும் என வேலூர் மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பில் கிரானைட் கற்களால் ஆன 50 இருக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இருக்கைகள் அமைக்கும் பணியை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மேயர் சுஜாதா கூறுகையில், இருக்கைகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.