திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் கரையான்விளை பகுதியில் வசித்தவர் வள்ளியம்மாள் (வயது76). இவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்து அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வள்ளியம்மாள் இறந்து விட்டதாக கூறினார்கள். இதுபற்றி இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வள்ளியம்மாள் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற்றும் குணமடையாததால் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.