கிராம வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-09 19:23 GMT


தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன், கிராம வங்கி அதிகாரிகள் சங்கம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் விருதுநகர் தமிழ்நாடு கிராம வங்கி மண்டல அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒர்க்கர்ஸ் யூனியன்மண்டல தலைவர் பரிதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, ஜனநாயக மாதர் சங்க மாநில நிர்வாகி லட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

Tags:    

மேலும் செய்திகள்