50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள்

வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படும் என சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-27 18:45 GMT

சீர்காழி:

வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படும் என சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உளுந்து சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தில் நடப்பு பருவம் நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்வதற்கு 7 ஆயிரத்து 340 எக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயறு சாகுபடி செய்வதனால் மண்வளம் பெருகும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

50 சதவீத மானியம்

பயறு வகை பயிர்களில் வேர் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் பாக்டீரியா வளிமண்டலத்தில் உள்ள தழை சத்தினை மண்ணில் நிலை நிறுத்த உதவுகிறது

பயறு சாகுபடி செய்ய தேவையான விதைகள் உளுந்து, ஆடுதுறை 3, ஆடுதுறை 5, வம்பன் 8 மற்றும் பாசி பயறு ஆடுதுறை 3 ரகங்கள் 50 சத மானியத்தில் வழங்கப்படுகிறது.

இருப்பு வைக்கப்பட்டுள்ளது

இந்த உளுந்து விதைகள் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், காரைமேடு மற்றும் திருவெண்காடு ஆகிய வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து விவசாயிகளும், உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு உளுந்து விதைகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்