சிவகாசி பகுதிகளில் கிராமசபை கூட்டம்

சிவகாசி பகுதிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-02 19:41 GMT

சிவகாசி, 

சிவகாசி பகுதிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

கிராம சபை கூட்டம்

காந்தி பிறந்தநாளையொட்டி நேற்று சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 கிராமங்களில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. சிவகாசி ஆனையூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டனர்.

இ்ந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், டாக்டர் வைரக்குமார், பொறுப்பு தலைவர் முத்துமாரி தங்கபாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் நாகராஜன் செய்திருந்தார். தேவர்குளத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் முத்து வள்ளி மச்சக்காளை தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் ராஜேஸ்வரி, சமூக தணிக்கையாளர் ரமேஷ், தலைமையாசிரியர் தேவராஜ், யூனியன் அதிகாரி ஜானகி ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் கருப்பசாமி செய்திருந்தார்.

சித்துராஜபுரம்

இதேபோல் சித்துராஜபுரம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு தலைவர் லீலாவதி சுப்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணைத்தலைவர் காளிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜம்மாள், விஜயலட்சுமி, மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் நர்மதாஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் அருள் செய்திருந்தார்.

விஸ்வநத்தம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் சக்தி வேல்நாகராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாகேந்திரன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் செல்வம் செய்திருந்தார். அனுப்பன்குளம் பஞ்சாயத்தில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் கவிதாபாண்டியராஜ் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணைத்தலைவர் புஷ்ப வேணி, செயலர் பேச்சியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாரியப்பன், பஞ்சா யத்து செயலர் கனகமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். நாரணாபுரம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்