அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் நாளை (வியாழக்கிழமை) குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையரிடம் இருந்து வரப்பெற்ற கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படும். இந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ரமண சரஸ்வதி (அரியலூர்), ஸ்ரீவெங்கடபிரியா (பெரம்பலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.