சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்

சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-12 17:17 GMT

சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு தவறாமல் நடத்தப்பட வேண்டும் என அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிராம சபைக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் (2022-ஏப்ரல் முதல் 2022-ஜூலை முடிய) குறித்து விரிவாக விவாதித்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி, சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை போன்றவை மேற்கொள்ளப்பட வேண்டும். கிராம சபைக்கூட்டங்களில் அனைத்து துறை உயர் அலுவலர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்