412 இடங்களில் கிராம சபை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 412 இடங்களில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 கிராம ஊராட்சிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010-ன் மறு கணக்கெடுப்பு, இணைய வழியில் வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல், சுழற்சி முறையில் சுய உதவிக் குழு நிர்வாகிகளை மாற்றம் செய்தல், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி இல்லாத கிராமங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.