கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக்குமார் தலைமை தாங்கினார், இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கமலக்கண்ணன், மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ரகு ஆகியோர் பார்வையிட்டனர். கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிக்கந்தர்பாட்சா, துணைத் தலைவர் கண்ணம்மாள் அம்மையப்பன், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வேறு கிராமத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு வடபுதூர் கிராமத்தில் அமைய உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அமைக்க கூடாது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முடிவில் ஊராட்சி எழுத்தர் முருகானந்தம் நன்றி கூறினார்.
649 தீர்மானங்கள்
சொலவம் பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சின்ராசு என்கிற செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் நாராயணசாமி, வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேட்டுப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிரகதீஸ்வரன், ஊராட்சி செயலாளர் என. சசிபிரகாஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முள்ளுப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி செந்தில்குமார மூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜகோபால், ஊராட்சி செயலாளர் சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அரசம்பாளையம் ஊராட்சியில் மன்ற தலைவர் காரச்சேரி கே. எம்.எஸ். சுந்தர்ராஜன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர் ஏ.எஸ்.ராஜ், ஊராட்சி செயலாளர் ராமசாமி மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அரசம்பாளையம், காரச்சேரி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கோடங்கிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் சக்திவேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கோவில்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாக்கியம் ஊராட்சி செயலாளர் கவிதா மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கோதவாடி ஊராட்சியில் கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை தலைவர் பரமசிவம், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 649 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.