பள்ளக்குறிச்சியில் கிராமசபை கூட்டம்

பள்ளக்குறிச்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-03 18:45 GMT

சாத்தான்குளம் யூனியன் பள்ளக்குறிச்சி பஞ்சாயத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பஞ்சாயத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் வைப்பது, மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் செல்லும் வெள்ளநீரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட வைரவன் தருவை மற்றும் அம்பாள்குளத்தை நிரப்ப வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைத்தலைவர் டார்வின், கவுன்சிலர்கள் சுதாகர், சீதா, திவ்யா, கீதா, நிஷாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி, பற்றாளர் வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பஞ்சாயத்து செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

* சாத்தான்குளம் யூனியன் புதுக்குளம் பஞ்சாயத்தில் கிராமசபை கூட்டம், தலைவர் பாலமேனன் தலைமையில் நடந்தது. யூனியன் தலைவர் ஜெயபதி, பற்றாளர் ஆவுடை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். உதவி வேளாண்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள்மணி, தலைமை ஆசிரியர்கள் ஜான் பிரிட்டோ, ரேவதி கவுசல்யா, ஆசிரியர்கள் ஞானசேகர், சப்திகா டோமிலா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஞானியார்குடியிருப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் தொட்டி அமைத்தல், ஞானியார்குடியிருப்பு- புதுக்குளம் இடையே புதிய தார் சாலை அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* சாத்தான்குளம் யூனியன் முதலூர் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம், தலைவர் பொன்முருகேசன் தலைமையில் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் மீனா, ஒன்றிய பற்றாளர் கணேசன், மண்டல அலுவலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து செயலாளர் முருகேசன் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் சுந்தரபாண்டி, கிராம உதவியாளர் டேவிட் சிங்கம், திட்ட ஒருங்கிணைப்பாளர், நூலகர் எமரன்சி, குடிநீர் வடிகால் வாரிய உதவியாளர் செந்தில், வார்டு உறுப்பினர்கள் சரஸ்வதி, கிறிஸ்டி, ஊர் பிரமுகர்கள் ஸ்டேன்லி, ஞானமுத்து, ராஜேஷ், சியோன், முத்துராஜ், டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* மணப்பாடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம், தலைவர் கிரேன்சிட்டா வினோ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சுனாமி நகரில் புதிதாக 2 மின்கம்பங்கள் அமைப்பது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணைத்தலைவர் ஜெலிஸ்சன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் விஜயராகவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலாளர் முகமது சாலிக் அசாருதீன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்