திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. உத்தமசோழபுரம் ஊராட்சியில் தலைவர் ஜனனி பாலாஜி தலைமையிலும், அகரக் கொந்தகை ஊராட்சியில் தலைவர் தமிழரசி தலைமையிலும், நரிமணம் ஊராட்சியில் தலைவர் கார்த்திக் தலைமையிலும், பில்லாளி ஊராட்சியில் தலைவர் தேவி சகாயராஜ் தலைமையிலும், வால்குடி ஊராட்சியில் தலைவர் அகிலாண்டேஸ்வரி விநாயகசுந்தரம் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
திருப்புகலூர் ஊராட்சியில் தலைவர் கார்த்திகேயன் தலைமையிலும், திருமருகல் ஊராட்சியில் தலைவர் கண்ணன் தலைமையிலும், கோட்டூர் ஊராட்சியில் தலைவர் முகமது சலாவுதீன் தலைமையிலும் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் ஊராட்சிகளின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் ஒன்றியத்திற்குட்பட்ட 39 ஊராட்சிகளில் ஊராட்சிமன்றத் தலைவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வருவாய் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.