தானிய மண்டி உரிமையாளர் பலி

தானிய மண்டி உரிமையாளர் பலி

Update: 2022-11-04 13:08 GMT

முத்தூர்

முத்தூர் அருகே சின்னமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 64). முத்தூர் பஸ் நிலையம் அருகில் தானிய மண்டி கடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது கடையில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். முத்தூர் - ஈரோடு சாலை செங்கோடம்பாளையம் பிரிவு அருகில் வலதுபுறம் திரும்பிய போது பின்னால் வந்த கார் ஒன்று திடீரென்று மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் முத்துச்சாமி பலத்த காயம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முத்துச்சாமியை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் முத்துச்சாமியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்