4 பல்கலைகழகங்களுக்கு பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு..!

4 பல்கலைகழகங்களுக்கு பட்டமளிப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-08 06:43 GMT

சென்னை,

திருச்சி, கோவை, நெல்லை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டம் பெறமுடியாத சூழல் நிலவுகிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை என புகார் எழுந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடைசியாக 2021 டிசம்பர் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற்று இருந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற முடியாத நிலையில், பட்டமளிப்பு விழா நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், 4 பல்கலைகழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்த தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பல்கலைகழகத்தில் ஜூன் 16-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. சேலம் பெரியார் பல்கலை.க்கு ஜூன் 28-ந் தேத் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. திருவள்ளுவர் பல்கலை.க்கு ஜூன் 19-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. நாகையில் உள்ள ஜெயலலிதா மீனவ பல்கலை.க்கு ஜூலை 7-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்