விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை
விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
திருவையாறு
திருவையாறை அடுத்த திங்களூர் மாதாகோவில் தெருவை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் பெலிக்ஸ் ஆனஸ்ட்ராஜ் (வயது25). இவர் பி.காம் வரை படித்துவிட்டு ஒரு தனியார் வங்கியில் குழுக்கடன் கொடுத்து வசூலிக்கும் வேலை பார்த்து வந்தார். இவர், சரிவர வேலைக்கு செல்லாததால் வங்கி அதிகாரிகள் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவரை வேலையைவிட்டு நிறுத்தி விட்டனர். இதன் காரணமாக வேலை இல்லாமல் பெலிக்ஸ்ஆனஸ்ட்ராஜ் வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில், சம்பவத்தன்று பெலிக்ஸ் ஆனஸ்ட்ராஜ் வீட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.