விஷம் குடித்த பட்டதாரி பெண் சாவு

விஷம் குடித்த பட்டதாரி பெண் உயிரிழந்தார்.

Update: 2022-09-13 19:40 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நெய்தலூர்காலனி மொட்டையன் தெருவை சேர்ந்தவர் பன்னீர்(வயது 47). இவரின் மகள் ஜெயஸ்ரீ(23). பி.எஸ்.சி. கணிதம் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக வீட்டில் படித்துகொண்டே வயல் வேலைக்கும் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் ஜெயஸ்ரீயின் தாயார் வீட்டில் இருந்து நன்றாக படிக்க வேண்டும் எனவும், வயல் வேலைக்கு வர வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயஸ்ரீ கடந்த 10-ந் தேதி அன்று தான் விஷம் குடித்துவிட்டதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயஸ்ரீ நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்