பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-28 18:52 GMT

கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகனபிரசாத் (24). பி.இ பட்டதாரி. இவர் படித்த படிப்பிற்கு சரியான வேலை கிடைக்காமல் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மோகனபிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்