ஜி.பி.எஸ். கருவி பொருத்தாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் - நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

செங்கோட்டை பகுதியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-05-04 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜெயப்பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கோட்டை பகுதியில் இயங்கி வரும் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் கண்டிப்பாக நகராட்சியிடம் முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உரிமம் பெற்ற வாகனங்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு ஜி.பி.எஸ். கருவி பொருத்தாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் நகராட்சி ஆணையரால் பறிமுதல் செய்யப்பட்டு முதற்கட்ட நடவடிக்கையாக அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்