உளுந்தூர்பேட்டை-பாலி கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கவேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

உளுந்தூர்பேட்டை-பாலி கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கவேண்டும் என கிராம மக்கள் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-03 16:57 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டையில் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு பாலி கிராமத்திற்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவியபோது நிறுத்தப்பட்ட அந்த பஸ், தற்போது வரை இயக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பும் பாலி கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து அதிகாாிகளிடம் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்