அரசு பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக இருந்தால் வேறுபள்ளிக்கு மாற்றலாம் - கல்வித்துறை உத்தரவு
குறைவான மாணவர்கள் இருந்தால் அவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 ,பிளஸ் 2 வகுப்பில் குறைவான மாணவர்கள் இருந்தால் அவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி ,நகராட்சி பகுதிகளில் 30க்கும் குறைவான ,ஊரக பகுதிகளில் 15க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் வேறு பள்ளிக்கு மாற்றலாம் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது