அரசு பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு களப்பயணம்

பூலாங்கிணர் அரசு பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு களப்பயணம்

Update: 2023-08-03 12:43 GMT

தளி

உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வருகின்ற மாணவ மாணவிகள் பள்ளிக்கு உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு களப்பயணம் மேற்கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி தொழிற்கல்வி ஆசிரியர் கே. செந்தில்குமார், பொருளியல் ஆசிரியை தேவிகா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செ சரவணன் ஆகியோர் மாணவ மாணவிகளை அழைத்துச் சென்றனர். இந்த களப்பணியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ரா.சுமித்ரா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்