அரசு மருத்துவமனை செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்க வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, சிகிச்சை முறை ஆகியவற்றை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-16 09:46 GMT

சென்னை,

அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர், செவிலியர் வருகை, சிகிச்சை முறை ஆகியவற்றை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என தமிழக சுகாதரத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளில் சோதனை நடந்த மண்டல அளவில் பறக்கும் படை அமைக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்