அரசு மருத்துவமனை விரிவாக்க பணி

அரசு மருத்துவமனை விரிவாக்க பணி

Update: 2023-02-04 12:27 GMT

தாராபுரம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தாராபுரம் மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வெளிநோயாளியாகவும், உள்நோயாளியாகவும் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் போதிய அளவு இடவசதி இல்லை. இதன் காரணமாக விபத்து மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கோவை அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கிடையே தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தாராபுரத்தை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய ரூ.24 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இதற்காக தாராபுரம் அரசு மருத்துவமனை பின்புறம் 1 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கு பூமிபூஜையும் நடைபெற்றது. ஆனால் இன்று வரை விரிவாக்க பணிகள் துவங்கப்படவில்லை. எனவே களப்பணியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியை ஆய்வு செய்து விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

-

Tags:    

மேலும் செய்திகள்