அவல நிலையில் அரசு ஆஸ்பத்திரி வளாகம்

மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுகாதார சீர்கேடுகளைத் தவிர்க்க கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-02 10:32 GMT

போடிப்பட்டி

மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுகாதார சீர்கேடுகளைத் தவிர்க்க கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

57 படுக்கைகள்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. கடந்த 1950-ம் ஆண்டு இதே இடத்தில் ஊராட்சி ஒன்றிய மருந்தகமாக தொடங்கப்பட்டு, படிப்படியான மாற்றங்களை சந்தித்து 2015-ம் ஆண்டு முதல் தாலுகா அரசு மருத்துவமனையாக உயர்ந்து நிற்கிறது. இங்கு 57 படுக்கைகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ஆனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் குடிமகன்கள் அட்டகாசத்தால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் நிலை உள்ளது.கட்டிடங்களுக்கு பக்கவாட்டில் உள்ள சிறிய இடைவெளிகளில் அமர்ந்து மது அருந்துதல் மற்றும் அசுத்தம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடிமகன்கள் அட்டகாசம்

மேலும் அந்த பகுதியில் குப்பைகள் வீசப்பட்டு சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது.இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே குடிமகன்களின் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுவது அவசியமாகும்.அத்துடன் உடனுக்குடன் சுத்தம் செய்து ஆஸ்பத்திரி வளாகத்தை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதவிர ஆஸ்பத்திரி வளாகத்தை வெளிநபர்கள் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தும் அவலமும் உள்ளது.இதனால் நோயாளிகளுக்கு பலவிதமான இடையூறுகள் ஏற்படுகிறது.எனவே ஆஸ்பத்திரிக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் காவலர்கள் நியமித்து முழுமையான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

-

Tags:    

மேலும் செய்திகள்