அரசு டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சிவகங்கை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-28 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

டாக்டர்கள்

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவர் அவர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சங்கத் தலைவர் டாக்டர் மதியழகன் செயலாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.

போராட்டம்

இந்த போராட்டம் தொடர்பாக சங்கத் தலைவர் மதியழகன், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:- அரசு டாக்டர்கள் நடத்தும் இந்த உள்ளிருப்பு போராட்டத்தினால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காலையில் வெளி நோயாளிகள் பிரிவு பணிகளை முடித்த பின்னர் போராட்டம் தொடங்கப்பட்டது. எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போராட்டம் நடைபெறும் என்று கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்