அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-11 21:06 GMT

பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று கருப்பு பட்டை அணிந்து 2-வது நாளாக வாயிற்கூட்டம் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்குமரன் தலைமை தாங்கினார். கல்லூரி உதவி பேராசிரியர் நியமன முறையில் பணி அனுபவ நேர்காணல் நடைமுறையை பின்பற்ற வேண்டும். மாநில தகுதி தேர்வை (டி.என்.எஸ்.இ.டி.) உடனடியாக நடத்த வேண்டும். கல்லூரி உதவி பேராசிரியர் எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும். சட்டக் கல்லூரிக்கு இணையான ரூ.30 ஆயிரம் ஊதியத்தை வழங்க வேண்டும். அரசாணை 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வாயிற்கூட்டம் நடைபெற்றது. பின்னர் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்