அரசு கேபிள் டி.வி. சேவை பாதிப்பு - அரசு கேபிள் டிவி நிறுவனம் விளக்கம்

தனியார் நிறுவன மென்பொருள் சேவைகள் தடைபட்டதால் அரசு கேபிள் டிவி நிறுவன சேவைகளில் தடங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசு கேபிள் டிவி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2022-11-20 08:20 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகள் திடீரென தடைபட்டதால் நேற்று முதல் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல் ஏற்பட்டது.

பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய தொழில்நுட்பக் குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரிசெய்யப்படும். அரசு கேபிள் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், அந்த தனியார் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கேபிள் டி.வி. நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்