விருதுநகரில் அரசு பஸ் ஜப்தி

விபத்து இழப்பீட்டு தொகை வழங்காததால் விருதுநகரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2023-04-24 19:02 GMT


விபத்து இழப்பீட்டு தொகை வழங்காததால் விருதுநகரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

முதியவர் பலி

சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்த முனியசாமி (வயது 62) என்பவர் கடந்த 2022 மார்ச் மாதம் அரசு பஸ்சில் ஏறிய போது அவர் ஏறுவதற்குள் பஸ் நகர்ந்து விட்டதால் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அவரது மகள் ஜெயமணி (42) மற்றும் குடும்பத்தினர் இழப்பீடு கோரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மாவட்ட கூடுதல் நீதிமன்றம் கடந்த 29.3.2022-ல் ஜெயமணி குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சத்து 3 ஆயிரத்து 700 இழப்பீட்டுத்தொகை வழங்குமாறு அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. அத்துடன் உத்தரவிட்டநாள் முதல் 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து இழப்பீட்டுத் தொகைவழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

அரசு பஸ் ஜப்தி

இந்தநிலையில் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில் ஜெயமணி, மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார்.

அதன் பேரில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் நேற்று விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் திருச்செந்தூருக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர் கடந்த 10 நாட்களில் விருதுநகரில் ஜப்தி செய்யப்படும் 3-வது போக்குவரத்து கழக பஸ் இதுவாகும்.

Tags:    

மேலும் செய்திகள்