அரசு பஸ் கண்ணாடியை உடைத்த பயணிக்கு அபராதம்
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த பயணிக்கு அபராதம்
பல்லடம், மே.18-பல்லடம் பஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை டிரைவர் சம்பத்குமார் ஓட்டி வந்தார். நாகராஜ் நடத்துனராக இருந்தார். அந்த பஸ்சில் மதுரையைச் சேர்ந்த ெபயிண்டர் வேல்முருகன்(வயது 50) பயணம் செய்தார். அந்த பஸ் பல்லடம் நிலையத்திற்கு வந்தவுடன் போதையில் இருந்த நாகராஜ் தூக்கம் கலைந்து திடீரென எழுந்தார். அப்போது அவர் அணிந்திருந்த கண் கண்ணாடி காணவில்லை என்று கூறப்படுகிறது. தேடிப் பார்த்த அவர் கண்ணாடி கிடைக்காததால், ஆத்திரத்தில் பஸ்சின் ஜன்னல் கண்ணாடியை கையால் ஓங்கி அடித்துள்ளார். இதில் கண்ணாடி உடைந்து சேதமானது. மேலும் வேல்முருகனின் கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து நடத்துனர் நாகராஜ், வேல்முருகனிடம் கேட்டபோது அவர் தெரியாமல் செய்து விட்டேன் என மன்னிப்பு கேட்டதாக கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பஸ் பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டது. போலீசார் விசாரணை செய்தனர். சேதமான கண்ணாடிக்கு இழப்பீடாக ரூ.500 வேல்முருகனிடம் வசூலிக்கப்பட்டது. பின்னர் போலீசார் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.----------