விக்கிரவாண்டி அருகேஅரசு பஸ் கண்ணாடி உடைப்பு

விக்கிரவாண்டி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.

Update: 2023-05-08 18:45 GMT


விக்கிரவாண்டி, 

விழுப்புரத்தில் இருந்து பொம்பூருக்கு நேற்று மதியம் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை செண்டியம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் ஜெயகர் (வயது 45) என்பவர் ஓட்டினார். வீடூர் முருகன் கோவில் பஸ் நிறுத்தத்தில், பயணிகளை இறக்கி விட்டுவிட்டு, அங்கிருந்து பஸ் புறப்பட்டது. அப்போது, யாரோ மர்ம நபர் ஒருவர் பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்வீசி உடைத்தார். இதுகுறித்து, ஜெயகர் அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி பேலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்