லாரி மீது அரசு பஸ் மோதல்; கண்டக்டர் உள்பட 8 பேர் காயம்

சாத்தூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி கொண்ட விபத்தில் கண்டக்டர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-10-26 18:45 GMT

சிவகாசி, 

லாரி மீது பஸ் மோதல்

மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சாத்தூர்-கோவில்பட்டி 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அரசு பஸ்சை கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் என்பவர் ஓட்டிவந்தார். இந்த பஸ்சில் கண்டக்டராக தாஸ் இருந்தார்.

பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில் அரசு பஸ், அந்த வழியாக சென்ற லாரியின் மீது மோதியது,

8 பேர் காயம்

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த குணசேகர் (வயது 51), தமிழ்மணி (21), அரசு பஸ் கண்டக்டர் தாஸ் (55), யமுனா (18), மேரி விமலாஜாய் (62), ஹரிநாத் (17), சாந்தி (46) உள்ளிட்ட 8 பேர் காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் விபத்தில் காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரசு பஸ்சில் பயணம் செய்த குணசேகர் கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

Tags:    

மேலும் செய்திகள்