மாணவிகளை கீழே இறக்கி விட்டதால் செஞ்சியில் அரசு பஸ் சிறைபிடிப்பு

மாணவிகளை கீழே இறக்கி விட்டதால் செஞ்சியில் அரசு பஸ்சை அவா்களது பெற்றோா் சிறைபிடித்தனா்.

Update: 2022-10-21 18:45 GMT


செஞ்சி, 

விழுப்புரம் பஸ்நிலையத்தில் வேலூர் செல்வதற்காக அரசு பஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் இருந்த கண்டக்டர், வேலூர் செல்பவர்கள் மட்டும் பஸ்சில் ஏறுமாறு தெரிவித்துள்ளார். மேலும், பஸ்சில் செஞ்சிக்கு செல்வதற்காக கல்லூரி மாணவிகள் சிலர் ஏறி அமர்ந்திருந்தனர். அவர்களை கண்டக்டர் கீழே இறக்கி விட்டார். இதன் பின்னர் அந்த பஸ், மற்ற பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே கல்லூரி மாணவிகள் இதுபற்றி தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அந்த பஸ் செஞ்சி வந்த போது மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டை ராஜன் ஆகியோர் விரைந்து சென்று, அவர்களை சமாதானம் செய்து, பஸ்சை அங்கிருந்து புறப்பட்டு செல்ல வைத்தனர். இந்த சம்பவத்திற்கு பஸ் கண்டக்டர், மாணவிகளின் பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்து சென்றதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்