தேசிய தரமதிப்பீட்டில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி 63-வது இடம்

தேசிய தரமதிப்பீட்டில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி 63-வது இடம் பிடித்துள்ளது

Update: 2023-06-05 18:45 GMT

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி 2023-ம் கல்வியாண்டிற்கான தேசிய தர மதிப்பீட்டில் 63-வது இடத்தைப் பெற்றுள்ளது. இக்கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதி, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பேராசிரியர்களின் ஆய்வு வெளியீடுகள், மாணவர்களின் பணி வாய்ப்பு மற்றும் பிற செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆண்டு தோறும் இந்திய அளவில் கலை அறிவியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலை தேசிய தர மதிப்பீட்டுக் குழு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டிற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் இந்திய அளவில் முதல் 100 இடங்களுக்குள் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 35 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளது. இதில் 4 அரசு கல்லூரிகள் இடம் பெற்றுள்ளது. அந்த 4 அரசு கல்லூரிகளில் சென்னையில் இருந்து 2 அரசு கல்லூரிகளும், கோவையில் இருந்து ஒரு அரசு கல்லூரியும், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தேசிய தர மதிப்பீட்டில் 63-வது இடத்தையும் பெற்றுள்ளது. இதற்காக கடும் முயற்சிகள் மேற்கொண்ட பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்