திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணிதவியல் மன்ற கூட்டம்

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணிதவியல் மன்ற கூட்டம் நடந்தது.

Update: 2022-11-22 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் கணிதவியல் மன்றக் கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். முதுகலை 2-ம் ஆண்டு மாணவி பா.பெரில் பாப்ஸி வரவேற்று பேசினார். கல்லூரி கணிதவியல் ஆராய்ச்சி துறை மாணவி பேபி சரண்யா, 'நானோ ஐடியல்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கணிதவியல் துறை தலைவர் ச.பசுங்கிளி பாண்டியன், உதவி பேராசிரியர் கு.பாகீரதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். முதுகலை 2-ம் ஆண்டு மாணவி காயத்ரி நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை பேராசிரியர்கள் தி.தங்கம், மா.கலைச்செல்வி, ஜெ.வெங்கடேஸ்வரி ஆகியோர் ெசய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்