கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார்.
சென்னை,
தமிழக கவர்னர் ஆர். என்.ரவி 3 நாட்கள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அதிகாரிகள் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி செல்ல இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் டெல்லியில் இருப்பார் என்றும் அதன் பிறகு சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.